தாஜுதீனின் கொலை விவகாரம் : பொலிஸாரை கடுமையாக சாடிய நாமல்
அரசாங்கம் நியாயமான விசாரணையை நடத்தி தாஜுதீனின் ஆன்மாவுக்கு நீதி வழங்க வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளாார்.
அரசாங்கம் பொலிஸாரை பயன்படுத்தி பொய்யான ஆதாரங்களை உருவாக்கி வருவதாகவும் நாமல் ராஜபகச குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தில் பதவி உயர்விற்காக செயற்பட கூடாது எனவும், பொலிஸார் தங்கள் மரியாதையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொய்யான ஆதாரங்கள்
சம்பவம் தொடர்பாக பொய்யான ஆதாரங்களை உருவாக்கி இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய உண்மைகளை மறைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குறைந்தபட்சம் தற்போதாவது நியாயமான விசாரணையை நடத்தி தாஜுதீனின் ஆன்மாவுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூடினின் சடலம் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி மீட்கப்பட்ட து. அவர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட போதிலும் அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தாஜூடினின் மரணம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



