மாளிகாவத்தையில் திடீர் சுற்றிவளைப்பு: விமான நிலையத்தில் சிக்கிய நால்வர்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழியாக சுங்க வரி செலுத்தாமல் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்களுடன் நான்கு பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கைடயக்க தொலைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 26 ஸ்மார்ட் போன்கள், 10 ஐபேட்கள், 10 டெப்கள், 3 மடிக்கணினிகள், பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் கிரீம்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸார் மேலதிக விசாரணை
மாளிகாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசேதகர் டி.பி.எஸ். கல்யாணதுங்கவுக்கு கிடைத்த தகவலின்படி, மாளிகாவத்தை ரம்யா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரு வீட்டிலிருந்து இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 30 ஆம் திகதி டுபாய்க்குச் சென்ற சந்தேகநபர்கள், நேற்று (2) நாடு திரும்பியபோது, இந்தப் பொருட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாளிகாவத்தை மற்றும் கொச்சிக்கடை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri