யாழ். மாநகர மேயருடன் கனேடியத் தூதுதர் சந்திப்பு (Video)
யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மணிவண்ணனைக் கனேடிய நாட்டுத் தூதுவர் இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணம் மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்

இதன்போது அரசியல், பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் மாநகர சபையின் முதல்வர் வி. மணிவண்ணன் மற்றும் ஆணையாளர் த.ஜெயசீலன் ஆகியோருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நினைவுச் சின்னங்கள் வழங்கி பரிமாறப்பட்டன. இதன்போது மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கனடிய தூதுவர் தன்னுடன் உரையாடிய விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“குறிப்பாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை யாழ்ப்பாண மாநகரத்தின் வளர்ச்சித் திட்டங்கள், நாடு இவ்வாறான நிலைமைக்கு போனதற்கான காரணங்கள் தொடர்பில் கேட்டறிந்தாக குறிப்பிட்டார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணன் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் நாட்டின் அபிவிருத்திக்கும் மாநகரத்தின் அபிவிருத்திக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கான விடயங்கள் தொடர்பிலும் தான் கனடிய தூதுவருக்கு தெரிவித்ததாக” ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.
மேலதிக தகவல்: திலீபன்
| இலங்கை மக்களின் உடனடி தேவைகளுக்காக அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கை |

ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan