இலங்கை மக்களின் உடனடி தேவைகளுக்காக அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கை
அமெரிக்க அரசாங்கம் உதவி
அமெரிக்க அரசாங்கம் மேலதிகமாக 5.75 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த மூன்றாவது தவணை புதிய நிதியுதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பண உதவி பயன்பாடு
இந்த பண உதவி, குறுகிய கால வேலைகள் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நேரடியாக விதைகள் போன்ற விவசாயப் பொருட்களை வழங்க பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The US is ensuring crucial humanitarian assistance to SL is delivered to those who need it most. A new donation of $5.75M - in addition to the $6M announced last week - will provide supplies, training & cash assistance directly to low income communities.https://t.co/4gEYdahdea
— U.S. Embassy Colombo (@USEmbSL) June 21, 2022

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
