விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணி திடீரென உயிரிழப்பு! பொலிஸார் வெளியிட்ட தகவல்
சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த வைத்தியர் ஒருவர் திடீரென உடல்நலம் மோசமடைந்து உயிரிழந்துள்ளதாக தியதலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்திலிருந்து தனது மனைவி மற்றும் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மகள்களுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
சுற்றுலாவின் ஒரு பகுதியாக ஹல்துமுல்லவின் கலுபஹான பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென உடல்நலம் மோசமடைந்து தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தினை சேர்ந்த சௌத்ரி ராபின் ஹாக் (54) என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர்கள் நாட்டை சுற்றி பார்ப்பதற்காக ஹல்துமுல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri