எல்நினோ தாக்கம்! மட்டக்களப்பில் குடிநீர் பிரச்சினை - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

Batticaloa Sunil Handunnetti El Niño
By Kumar Jul 31, 2026 12:49 PM GMT
Report

தற்போதைய எல்நினோ காலநிலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை சீர்செய்யும் வகையில் புதிய திட்டங்களுக்கு இன்றைய தினம் (31.07.2026) மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு அனுமதிகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதிகளில் அதிகபட்சமான தொகை இந்த ஆண்டே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி விடயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

வைத்தியசாலையில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடகர்.. பொலிஸ் அதிகாரி மீது கடும் தாக்குதல்

வைத்தியசாலையில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடகர்.. பொலிஸ் அதிகாரி மீது கடும் தாக்குதல்

நிதி ஒதுக்கம்

குறிப்பாக, இந்த 2026ஆம் ஆண்டிற்கு நாம் 10,455 மில்லியன் ரூபா செலவில் 2573 திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். சமீப காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரசாங்கத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நிதித் தொகை இந்த ஆண்டிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் 204 திட்டங்களுக்காக 60 மில்லியன் ரூபாயும், 10 பாலங்களுக்காக 243 மில்லியன் ரூபாயும், 43 கிராமிய வீதிகளுக்காக 250 மில்லியன் ரூபாயும், பிரஜாசக்தி திட்டத்தின் 127 பணிகளுக்காக 666 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு வீடற்றவர்களுக்கு 272 வீடுகளைக் கட்டித் தந்த நிலையில், இந்த ஆண்டு அதனை 521 ஆக உயர்த்தி, அதற்காக 1,064 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளோம். சிறப்புத் திட்டமாக, கிராமப்புறங்களிலுள்ள சிறு தொழில்முனைவோருக்கும் பெண்களுக்கும் தங்களது வீடுகளிலேயே பண்ணைகளை அமைத்துக் கொள்வதற்காக 19 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

அப்பண்ணைகள் மூலம் கிடைக்கும் முட்டைகளை, அக்கிராமத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் சத்துணவுத் திட்டத்திற்கு வழங்கி கிராமப்புற பொருளாதாரத்தைச் சீரமைப்பதே இதன் நோக்கமாகும். இதுதவிர, மாகாண சபையின் கீழ் 608 திட்டங்களுக்காக 2,699 மில்லியன் ரூபாயும், பல்வேறு அமைச்சுக்கள் மூலம் 1,041 திட்டங்களுக்காக 4,528 மில்லியன் ரூபாயும், 15 வெளிநாட்டு உதவித் திட்டங்களுக்காக 804 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கலந்து கொண்ட கூட்டத்தின் தீர்மானத்தின்படி, பிரதான திட்டமாக கிரான் பாலத்தைக் கட்டுதல் உட்பட 5 பாலங்களைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு களப்பில் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், அதன் நீர்த்தேக்கப் பகுதியை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல்நினோ தாக்கம்! மட்டக்களப்பில் குடிநீர் பிரச்சினை - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி | Water Supply And Drainage Board New Projects

குழு நியமனம்

கடந்த 40 ஆண்டுகளாக இக் களப்பு தூய்மைப்படுத்தப்படாததால், சிறிய மழையின் போதும் பகுதி வெள்ளத்தில் மூழ்குகிறது. இதற்கான வடிவமைப்புப் பணிகளை விவாதிக்க ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 7000 மில்லியன் ரூபா மதிப்பிலான நமது திட்டங்கள் அனைத்தும் 100 வீதம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்கு அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் நன்றிகள். இருப்பினும், வனப்பகுதி எல்லைப் பிரச்சினை மற்றும் அதற்குரிய போதிய வளங்கள் இல்லாத நிலை இன்னமும் நிலுவையில் உள்ளது.

மேலும், 96 கிலோமீட்டர் தூரத்திற்கு யானை வேலி அமைக்கும் பணியை இந்த ஆண்டிற்குள் முடிப்போம் என நம்புகிறோம். அதேபோல், மயிலத்தமடு பகுதியில் கால்நடை மேய்ச்சல் நிலத்திற்காக ஒதுக்கப்பட்ட 1570 ஏக்கர் காணியை உறுதியாகப் பிரித்தளித்து, அதனை மகாவலி அதிகாரசபைக்கு வழங்கி முறைப்படி அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்

கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்

சட்டவிரோத ஆக்கிரமிப்பு

காணிகளின் உரிமை குறித்த சான்றுகளைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 15 வரை அளிக்கப்பட்ட அவகாசத்திற்குப் பிறகு யாரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்காததால், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உரிமைகளை முறைப்படுத்தி வழங்குவது நமது பொறுப்பாகும்.

வரவிருக்கும் 'எல் நினோ' சூழலால் மட்டக்களப்பில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. தற்போதே உன்னிச்சை மற்றும் வாழைச்சேனை சுத்திகரிப்பு நிலையங்களின் கொள்ளளவு போதாமல் உள்ளது.

எனவே, கோரளைப்பற்று வடக்கு, வாகனேரி குளம் மற்றும் போரதீவுப்பற்று பகுதியில் உள்ள ஹெமுத்துருவ குளம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் புதிய குடிநீர்த் திட்டங்களைத் தொடங்குவதற்கும், அக் குளங்களில் இருந்து நீரைப் பெற்று சுத்திகரித்து விநியோகிப்பதற்கும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

கோட்டாபய ராஜபக்சவினால் ஊடகங்களை அச்சுறுத்திய இரகசிய உளவுத்துறை கொலைக் கும்பல் தொடர்பான புதிய தகவல்கள்..

கோட்டாபய ராஜபக்சவினால் ஊடகங்களை அச்சுறுத்திய இரகசிய உளவுத்துறை கொலைக் கும்பல் தொடர்பான புதிய தகவல்கள்..

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US