சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை ரூ. 3,811 மில்லியன் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவிப்பொலிஸ் அத்தியாட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (31) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத சொத்துக்களை செயலிழக்க செய்ய நடவடிக்கைகள்
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் ரூ. 1490 மில்லியன் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டில் ரூ. 1549 மில்லியன் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் ரூ. 772 மில்லியன் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை அரசாங்கத்திடம் இருந்து பறிமுதல் செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், போதைப்பொருள் தொடர்பான 239,384 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சொத்துக்கள் குறித்தும் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட 995 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட 378 சந்தேகநபர்களின் சொத்துக்கள் குறித்தும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3287 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகளும் பெறப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கடந்த ஒன்பது மாதங்களில், பாதுகாப்புப்படையினரால் 2253 கிலோ 834 கிராம் ஹெரோயின், 2640 கிலோ 695 கிராம் ஐஸ் மற்றும் 293 கிலோ 732 கிராம் கொக்கைன் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருட்களின் மதிப்பு 102,116 மில்லியன் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri