பருத்தித்துறை இளைஞர் விபத்தில் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணி பிரிவுக்குட்பட்ட சிட்டிவேரம் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை, தும்பளை, நெல்லண்டையைச் சேர்ந்த சின்னராசா துளசிகன் (வயது 27) என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சிட்டிவேரம் அம்மன் ஆலயத்துக்கு அருகில் சென்ற வேளையில் திடீரென வண்டு ஒன்று அவரது கண்ணுக்குள் புகுந்துள்ளது.

இதனால் நிலைதடுமாறிய அவர், மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிலியந்தல துப்பாக்கிச்சூடு! பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் - விசாரணையில் வெளியான தகவல்
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri