சமஷ்டியை ஒருபோதும் தமிழரசுக் கட்சி விட்டுக் கொடுக்காது: சிறிநாத் எம்.பி தெரிவிப்பு
தமிழ் மக்களின் கோரிக்கையான சமஷ்டியை ஒருபோதும் தமிழரசுக் கட்சி விட்டுக் கொடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் சமஷ்டியை வைத்திருக்கின்றார். இருந்து போதும் சமஷ்டி என்பது தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான கோரிக்கை. தமிழரசு கட்சிதான் இந்த விடயத்தை முன்வைத்திருந்தது.
சமஸ்டி
ஆனால் இந்த விடயத்தை ஒரே பாய்ச்சலில் ஒரே இரவில் பெற்றுக்கொள்ள கூடிய விடயம் அல்ல. எங்களுக்கு ஆகக் குறைந்த தீர்வாக பெறப்பட்ட அந்த மாகாண சபை அதிகாரத்தை கூட நாங்கள் பெற்று அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்கு நாங்கள் செல்ல வேண்டும்.

ஆகவே அந்த மக்களின் ஆணையை தெளிவாக விளங்கிக் கொண்டு அந்த அடிப்படையிலே அந்த பாதையை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழரசுக்கட்சி மிக நிதானமாகவும் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றது.
ஆனால் தமிழ் தேசிய காங்கிரஸ் சமஷ்டியை நேரடியாக பெறுவதாக கூறுகின்றார்கள்.ஆனால் சமஷ்டியை தமிழக கட்சி எந்த இடத்திலும் விட்டுக் கொடுப்பதாக கூறவில்லை.
அரசியல் போராட்டம்
அதை சிங்கள மக்களுக்கு அந்த வார்த்தை ஒரு நெருக்கடியாக சொல்லப்பட்டால் அதை வார்த்தை பிரயோகத்தின் ஊடாக அதன் உள்ளடக்கத்தை அதிகாரத்தை தமிழ் மக்களுக்கு கொண்டு செல்வதற்கான பயணத்தை தான் தமிழரசு கட்சி கொண்டிருக்கின்றது.

அதற்கு மீறி எங்களுடைய பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி நாங்கள் எந்த விடயங்களையும் செய்ய விட முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றிலேயே எங்களுக்கு நன்றாக தெரியும்.
அந்த அடிப்படையிலே இந்தியாவில் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்தின் ஊடான இந்த மாகாண சபையை நாம் முதல் மிக வெற்றிகரமாக அதன் முழுமையான அதிக அதிகாரங்கள் பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட அரசியல் நகர்வாக செய்ய வேண்டும் என்பதை யதார்த்த கள அரசியல் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.