மணல் ஏற்றிய போது வசமாக சிக்கிய டிப்பர் சாரதிகள்
கிளிநொச்சியில் மணல் ஏற்றிய ஐந்து டிப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (27.12.2025) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மணல் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி கல்லாறு பகுதியின் பறவைகள் சரணாலயம் பகுதியில் அனுமதி இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையிலேயே டிப்பர் வாகனங்களுடன் அதன் சாரதிகள் கைதாகியுள்ளனர்.

விசேட சுற்றிவளைப்பு
தர்மபுர பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் மூலம் இவர்கள் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த டிப்பர் சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தடய பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |