லண்டனில் இஸ்ரேலிய குடியிருப்பு சொத்து விற்பனை கண்காட்சி: தடை விதிக்க பாலஸ்தீன தூதுவர் கோரிக்கை
லண்டனில் நடைபெறவிருக்கும் இஸ்ரேலிய சொத்து விற்பனை கண்காட்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என பிரித்தானியாவுக்கான பாலஸ்தீன தூதுவர் ஹுசாம் சோம்லோட், பிரிட்டனின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமைச்சர் ஹமிஷ் பால்கனருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை பகுதியில் சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக, சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளில் உள்ள வீடுகள் மற்றும் நிலங்களை விற்பனை செய்வதற்காக, "தி கிரேட் இஸ்ரேலி ரியல் எஸ்டேட் ஈவென்ட்" என்ற பெயரில் லண்டனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்காட்சியொன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரவி செனவிரத்ன - ஷானியிடம் முதலில் விசாரிக்க வேண்டும்! துமிந்த திஸாநாயக்க வலியுறுத்தல்
அனுமதி வழங்கக் கூடாது..
இந்த நிகழ்வு, சர்வதேச சட்டங்களை முற்றிலும் மீறும் செயல் என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் குடியிருப்புகளை அமைப்பதைத் தடை செய்யும் ஐ. நா பாதுகாப்பு கவுன்சிலின் 2334ஆவது தீர்மானத்திற்கும், பிரிட்டன் அரசின் கொள்கைகளுக்கும் எதிரானது என்றும் பாலஸ்தீன தூதுவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சட்டவிரோத இஸ்ரேலிய குடியிருப்புகளின் மூலம் இலாபம் ஈட்டும் அல்லது அத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கும் பிரித்தானிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் பாலஸ்தீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan