நெதன்யாகுவை சந்திக்கவுள்ள ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை( Benjamin Netanyahu) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவிற்கு அடுத்த வாரம் விஜயம் மேற்கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, வொஷிங்டனில் வைத்து அதிபர் பைடனை சந்திக்கலாம் எனவும், தற்போது கோவிட் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் பைடனின் உடல்நிலையை பொருத்தே இதுபற்றிய இறுதி முடிவு எட்டப்படும் என்றும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமைதி ஒப்பந்தம்
இது தொடர்பில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கருத்து தெரிவிக்கையில், "பிரதமர் நெதன்யாகு வொஷிங்டன் நகரில் இருக்கும் போது. இருநாட்டு தலைவர்களும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
எனினும், தற்போதைய சூழலில் எதையும் உறுதியாக கூறிவிட முடியாது. பைடனின் உடல்நிலை சரியாக வேண்டும். அவருக்கு கோவிட் பாதிப்பு குணமடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் பட்சத்தில் இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் போர் குறித்த ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முன்னதாக பைடன் ஹமாஸ் உடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
