இஸ்ரேலிலுள்ள அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
இஸ்ரேலின்(Israel) டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது இன்று(19.07.2024) அதிகாலை டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் பென் யகுதா மற்றும் ஸலோம் அலெய்கெம் வீதிகள் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒருவர் உயிரிழப்பு
இந்த வான்வழித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அமெரிக்க தூதரக கட்டிடத்துக்கு மிக அருகாமையில் உள்ள கட்டிடத்தின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் காசா நகரில் இயங்கி வரும் அமெரிக்க பாடசாலை மீதும், 2 அகதி முகாம்கள் மீதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 38,848 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 89,459 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
