முடிவில் மாற்றமில்லை! நட்பு நாடுகளுக்கு நெதன்யாகுவின் பதில்
“நட்பு நாடுகளின் ஆலோசனைகளுக்கு நன்றி ஆனால் எங்களின் முடிவுகளை நாங்களே எடுப்போம்” என இஸ்ரேலின் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தூதர்களுடன் மேற்கொண்ட சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "எமது நட்பு நாடுகளின் வார்த்தை மற்றும் செயல் மூலமான ஆதரவையும் ஆலோசனையையும் நான் பாராட்டுகின்றேன்.
இஸ்ரேலின் முடிவு
அத்துடன், அவர்களின் பரிந்துரைகளையும் நாம் வரவேற்கின்றோம். ஆனால், தற்போது எமது பரம எதிரியான ஈரானால் நாங்கள் தாக்கப்பட்டுள்ளோம்.
எனவே, இங்கு நான் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இஸ்ரேல் தன் முடிவுகளை தானே எடுக்கும்.
மேலும், தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |