உக்கிரமடையும் தாக்குதல்! அலி கமெய்னியின் பகிரங்க அறிவிப்பு
தங்களது நாட்டின் மீது யாராலும் யுத்தம் அல்லது அமைதியை திணிக்க முடியாது ஈரான் உச்ச ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமெய்னி தெரிவித்துள்ளார்.
ஈரான் எந்த அழுத்தத்திற்கும் தலைவணங்காது என அவர் தெரிவித்துள்ளார்.
பகிரங்க போர்
இன்று நேரலை செய்யப்பட்ட உரையில் பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பகிரங்க போராக இருந்தாலும், அமைதி என்ற பெயரிலான அழுத்தங்களாக இருந்தாலும் அவற்றுக்கு அடிபணியப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஈரான் இவற்றை ஏற்காது.
இவ்வாறான விடயங்களுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தலையீடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் வெளியிட்ட அச்சுறுத்தல்களை பகிரங்கமாகக் கண்டித்த கமெய்னி, "ஈரானை அச்சுறுத்தி அடக்க முடியாது.
வரலாற்றைப் பார்த்தால் எங்கள் நிலைப்பாட்டை யாரும் புரிந்துகொள்வார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
"அமெரிக்க தலையீடு இடம்பெற்றால் , அது ஈரானுக்கு மட்டுமல்ல, உலகுக்கு மீள முடியாத விளைவுகளைத் தரும்," எனவும் அவர் எச்சரித்தார்.
இஸ்ரேலின் பிழைகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
