இஸ்ரேல்-ஈரான் போர்ப் பதற்றம்! உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் உச்சம் எட்டிய நிலையில், தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம் குறித்த கருத்துக்கள் வெளியாகின்றன.
குறிப்பாக இஸ்ரேல் - ஈரான்(Iran) மோதல் தீவிரமடைந்ததையடுத்து, பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் தங்கவிலை அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை
உலக தங்க சபை (World Gold Council) நடத்திய கருத்துக்கணிப்பில், 95 சதவீத மத்திய வங்கிகள் தங்களுடைய தங்க கையிருப்புகளை அடுத்த 12 மாதங்களில் அதிகரிப்பார்கள் எனவும், 43 சதவீத வங்கிகளில் தங்களுடைய தனிப்பட்ட தங்க கையிருப்புகளும் அதிகரிக்கும் என கூறியுள்ளார்கள்.

இதற்கமைய, தங்கம் உலகளவில் யூரோவை பின்தள்ளி இரண்டாவது பெரிய கையிருப்பு நாணயமாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், அமெரிக்க பொருளாதார புள்ளிவிவரங்களை முதலீட்டாளர்கள் புறக்கணித்து, முழுக்க முழுக்க உலக அரசியல் சூழ்நிலையையே கவனிக்கின்றனர்.
அந்தவகையில், இன்று(18) இடம்பெறவுள்ள அமெரிக்க Federal Reserve சந்திப்பு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.
தங்கத்தின் எதிர்காலம்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை பணவீக்கம் (Inflation) நிலவரத்தை பார்த்த பிறகு மட்டுமே அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

2025 இரண்டாம் பாதியில் இரண்டு வட்டி விகிதக் குறைப்புகள் நடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தங்க அவுன்ஸ் 3360 டொலர் என்ற நிலைக்கு மேலாக நிலைத்திருந்தால் விலை உயரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் Federal Reserve வட்டி விகிதத் தீர்மானம்,மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல்,இந்தியாவில் குறைந்த நகை தேவை ஆகியவை தங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளன.
இந்திய சந்தையில் 24 கரட் தங்கம் இந்திய ரூபா 97,200 – 1,02,500 வரையிலான வீச்சில் பரிமாறப்படுகின்றதாக இந்திய சந்தை தகவல்கள் கூறுகின்றன. இந்தநிலையில், தங்க விலைகள் இந்த வாரமும் பதட்டமாகவே காணப்படும்.
ஜூன் 18இல் நடைபெறவுள்ள அமெரிக்க வட்டி விகித அறிவிப்பே முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று நிபுணர் மனீஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan
சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam