கஸ்ஸப்ப தேரரைக் கைது செய்ய பிடியாணை
பலாங்கொட கஸ்ஸப்ப தேரரைக் கைது செய்ய பிடியாணை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கைது செய்ய பிடியாணை
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முற்பட்ட மற்றும் சட்டவிரோத கட்டுமானச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கின் 2ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கஸ்ஸப்ப தேரர், வழக்கு விசாரணைகளுக்கு முன்னிலையாகாத நிலையில், இந்தப் பிடியாணை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குடன் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களுள் 9 பேரை நாளையதினம் வாக்குமூலம் வழங்குவதற்காக திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.