தெற்கு லெபனானில் இஸ்ரேல் தீவிரத் தாக்குதல் : பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டதாக குற்றச்சாட்டு
தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் தங்களது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
டயர் மாவட்டத்தில் உள்ள அல்-சய்யாத் மற்றும் அல்-மன்சூரி ஆகிய பகுதிகளில் மூன்று முறை இஸ்ரேலியப் படைகள் திடீர் சோதனைகளையும் வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளதாக லெபனானின் தேசிய செய்தி முகமை தெரிவித்துள்ளது.
தானாகவே எரியும் தன்மை கொண்ட
அதேபோல், பிண்ட் ஜுபெயில் மாவட்டத்தில் உள்ள கூனைன் நகரின் மீது இஸ்ரேலிய விமானங்கள் இரண்டு முறை குண்டுவீச்சுகளை நடத்தியுள்ளன.
குறிப்பாக, பிண்ட் ஜுபெயில் மாவட்டத்தில் உள்ள கூனைன் மற்றும் பெய்ட் யஹூன் ஆகிய நகரங்கள் மீது சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஒக்சிசனுடன் தொடர்பு கொள்ளும்போது தானாகவே எரியும் தன்மை கொண்ட இந்த பொஸ்பரஸ் குண்டுகள், மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் இவை போர்க்களத்தில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளன.
இது தவிர, கஃபார், பராஷித் மற்றும் சபாத் அல்-படிக் ஆகிய நகரங்களிலும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam