பதிலடி கொடுத்த இஸ்ரேல்.....! துருக்கியிலிருந்து தூதுவர்கள் உடனடியாக வெளியேற்றம்
புதிய இணைப்பு
காசா மீது இஸ்ரேல் நடத்தும் வான் தாக்குதல்களை துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், அந்த நாட்டிலுள்ள தமது நாட்டு தூதுவரை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் தனது நாட்டு தூதுவர்களுக்கு வெளியேறும் உத்தரவை பிறப்பித்துள்ளதாக x பதிவில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றையதினமும் காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்தும் தாக்குதல்களை துருக்கிய அதிபர் "படுகொலை" என்று வர்ணித்துள்ளார்.
נשמע שהחימום פחות הצליח... pic.twitter.com/g0JUFNIXQj
— Gil Feldman (@feldman_gil) October 28, 2023
முதலாம் இணைப்பு
இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேள்வி எழுப்பிய நிலையில் நேற்று முன்தினம் வரை கொல்லப்பட்ட 7,028 பேரின் பெயர் விபரங்களை பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், காசா தரப்பு வழங்கி இருக்கும் உயிரிழப்பு எண்ணிக்கையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
210 பக்கங்கள் கொண்ட அறிக்கை
இதற்கு பதில் அளிக்கும் வகையில் காசா சுகாதார அமைச்சு 210 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கொல்லப்பட்டவர்களின் பெயர், வயது, பால் மற்றும் அடையாள அட்டை இலக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிர்வாகம் மனிதத் தரங்கள், தார்மீகங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமை பெறுமானங்களற்ற வகையில் உயிரிழப்பு எண்ணிக்கையை வெட்ககரமான முறையில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா தெரிவித்துள்ளார்.
துருக்கி ஜனாதிபதி குற்றஞ்சாட்டு
இஸ்ரேல் ஒரு போர்க்குற்றவாளி என்பதை உலகம் முழுவதுக்கும் சொல்வோம் என்றும் காசாவில் நடந்த படுகொலையின் பின்னணியில் உள்ள முக்கிய குற்றவாளி மேற்குலகம் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இஸ்தான்புல்லில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பேரணியில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
இஸ்ரேல் புதிய தாக்குதல் வியூகம்....! அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பணயக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு
சுதந்திரப் போராளிகள்
காசா பகுதியில் இஸ்ரேலின் குண்டுவீச்சு பற்றிய தனது கண்டனத்தையும், விமர்சனத்தையும் வெளியிட்டார்.
தெற்கு இஸ்ரேலில் ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட இஸ்ரேலிய மக்களின் மரணங்களை துருக்கி கண்டிப்பதாகவும் தெரிவித்த அவர், பலஸ்தீனியர்களை "சுதந்திரப் போராளிகள்" என்று குறிப்பிட்டார்.
காசாவில் நடந்த படுகொலையின் பின்னணியில் உள்ள முக்கிய குற்றவாளி மேற்குலகம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
துருக்கி குடியரசின் நூற்றாண்டு விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து நடைபெற்ற மிகப்பெரிய பலஸ்தீனிய சார்பு பேரணிகளில் ஒன்றாக இந்த பேரணி என தெரிவிக்கப்படுகின்றது.