உக்கிரமடையும் யுத்த களம்....! ஆயிரக்கணக்கில் பலியான குழந்தைகள்: துண்டிக்கப்படும் காசா நிலப்பரப்பு (Video)
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் 3,320 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், காசாவில் இதுவரை 8 ஆயிரத்து 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 ஆயிரத்து 320 குழந்தைகள் உள்ளடங்குவர்.
20,000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து தடை
இஸ்ரேலியத் இராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் தமது தரைப்படை தாக்குதலை விரிவுபடுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வடக்கு காசாவுக்கும் தெற்கு காசாவுக்கும் இடையிலான ஒரு முக்கிய வீதியை இஸ்ரேலிய போர்த்தாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் இடைமறித்துள்ளன.
இந்த வீதி இடைமறிப்புச் செய்ததன் காரணமாக இந்த வீதியூடான பலஸ்தீன மக்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு காசாவில் தற்பொழுது தமது துருப்புகள் நிலைகொண்டுள்ள இடங்களின் விபரங்களை வெளியிட மறுத்த போதிலும், காசாவின் முக்கிய பாதையை இஸ்ரேலிய போர்தாங்கிகள் அடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இரகசிய சுரங்க நகரம்
பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் காசா பகுதியில் சுமார் 260 அடி ஆழத்தில் 500 கிலோமீற்றர் தொலைவுக்கு இரகசிய சுரங்க நகரத்தை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுரங்க நகரத்தில் பதுங்கியிருந்து இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக அவர்கள் போரிட்டு வருகின்றனர்.
ஹமாஸ் போராளிகளின் போர் வியூக பின்னணியில் இரகசிய சுரங்க நகரம் இருப்பது தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் ஒரு போர்க்குற்றவாளி என்பதை உலகம் முழுவதுக்கும் சொல்வோம் என்றும் காசாவில் நடந்த படுகொலையின் பின்னணியில் உள்ள முக்கிய குற்றவாளி மேற்குலகம் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
