மனோ கணேசனின் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்க முடியாது: அமைச்சர் ஜீவன் தொண்டமான்

Smt Nirmala Sitharaman Sri Lanka Politician Jeevan Thondaman India Central Province
By Thirumal Nov 03, 2023 03:09 PM GMT
Report

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அழைப்பு சென்றுள்ளது எனவே, மனோ கணேசனின் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்க முடியாது என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது மகிழ்ச்சியளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (03.11.2023) கொழும்பில் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாம் 200 நிகழ்வு பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் நடந்து முடிந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்

ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்

வாழ்த்து செய்தி

எமது அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், பா.ஜ.காவின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், பா.ஜ.காவின் தமிழ்நாட்டின் மாநில தலைவர் அண்ணாமலை, வெளிநாட்டு பிரமுகர்கள், பெருந்தோட்ட கம்பனிகள் தலைவர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், வர்த்தகர்கள், ஊடக நண்பர்கள், மலையக மக்கள் ஆகியோருக்கு நன்றிகள்.

மனோ கணேசனின் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்க முடியாது: அமைச்சர் ஜீவன் தொண்டமான் | Israel Hamas War Iran Announcement

அதேபோல தமிழக முதல்வரால் நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போனாலும் வாழ்த்து செய்தியை காணொளியாக அனுப்பி வைத்து தமிழக அரசின் ஆதரவையும் வெளிப்படுத்தினார். அவருக்கும் எமது நன்றிகள்.

மலையக மேம்பாடுகள்

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழு, பாதீட்டுக்கு முன்னர் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளும். அத்துடன், கல்வி, சுகாதாரம் உட்பட மலையக மேம்பாடுகள் சம்பந்தமாகவும் இந்த குழு கவனம் செலுத்தும்.

அத்துடன், பெருந்தோட்டக் கம்பனிகளால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'அவுட்குரோ' முறைமை தவறு, எனவே, தொழிலாளர்களுக்கு வருமானம் அதிகரிக்ககூடிய வகையில் அந்த 'அவுட்குரோ' முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசனின் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்க முடியாது: அமைச்சர் ஜீவன் தொண்டமான் | Israel Hamas War Iran Announcement

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இது பற்றி அறிவித்தார். பிரதமர் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் நானும் இருக்கின்றேன். ஏனைய அமைச்சர்களும் உள்ளனர். அனைவரும் இணைந்து பாதீட்டுக்கு முன்னதாக தீர்வை முன்வைப்பார்கள்.

பெருந்தோட்ட கல்வி துறை  

சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்புகளின் ஆலோசனைகளும் இதற்காக உள்வாங்கப்படும். காணி உரிமை மட்டுமல்ல கல்வி, சுகாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சம்பந்தமாகவும் ஆராய்ந்து, உரிய தீர்வு பொறிமுறையை இந்த குழு முன்வைக்கும்.

அதேபோல இந்திய அரசால் மலையக மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள 3 ஆயிரம் மில்லியனில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் பற்றி ஆராய எமது அமைச்சில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மலையக தமிழ் எம்.பிக்களுடன் மட்டுமல்ல மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் ஆலோசனைகள் பெறப்படும். கட்சி, தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து மலையக மேம்பாட்டுக்காக இந்த நிதியை பயன்படுத்த முன்வர வேண்டும்.

மனோ கணேசனின் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்க முடியாது: அமைச்சர் ஜீவன் தொண்டமான் | Israel Hamas War Iran Announcement

பாதீட்டில் எனது அமைச்சுக்கு 14 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வழமையாக 3 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் நிலையில், இம்முறை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா உட்கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்தப்படும்.

ஆசிரியர்கள் விடுதி உட்பட மலையக பெருந்தோட்ட கல்வி துறை அபிவிருத்திக்காக 1500 - 2000 மில்லியின் ரூபா வரை ஒதுக்கப்படும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 'அவுட்குரோ' சிஸ்டம் சிறந்த சம்பள தீர்வாக அமையும். ஆனால் பெருந்தோட்டக் கம்பனிகளால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் முறைமை ஏற்புடையது அல்ல. எனவே, பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சு நடத்தி இதனை மாற்றி, சிறந்த பொறிமுறை உருவாக்கப்படும். இதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் உடன்படாவிட்டால் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகளவில் தற்போது ஹீரோவான நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர் பிரசன்னா குருக்கள் (Video)

உலகளவில் தற்போது ஹீரோவான நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர் பிரசன்னா குருக்கள் (Video)


மனோ கணேசனுக்கு அழைப்பு விடுத்தோம்

எல்லோரும் ஒன்றுமையாக செயற்பட வேண்டும் என்பதே எமது நோக்கம். நாம் 200 நிகழ்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அழைப்பு சென்றுள்ளது.

சுமந்திரன், சாணக்கியனும் வருகை தந்திருந்தனர். திகாம்பரமும் வரமுடியாமை குறித்து தெளிவுபடுத்தினார். வடிவேல் சுரேசும் வரமுடியாமைக்கான காரணத்தை தொலைபேசி மூலம் அறிவித்தார். ஆகவே மனோ கணேசனின் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேடையில் நான் ஏறினேன். பெரும்பான்மை இனத்தை சேர்ந்த எதிரணி அரசியல் தலைவர்கள் கூட நிகழ்வுக்கு வந்திருந்தனர். என் சமூகத்தை சார்ந்த அரசியல் தலைவர்கள் வராமை கவலையளிக்கின்றது. மனோ கணேசனுக்கு அழைப்பு விடுத்தோம்.

ஜெனிவா சென்று 20 ஆம் திகதி நாடு திரும்பினேன். இது நமது சமூகத்துக்கான நிகழ்வு, அழைப்பிதழை நீங்கள் எதிர்பார்க்க கூடாது இருந்தாலும் அனுப்பினோம் என மனோ கணேசனிடம் கூறினேன். சொந்த வீட்டு கல்யாணத்துக்கு யாரும் அழைப்பிதல் கொடுக்க மாட்டார்கள். ஆனால் எங்களை வெளிநாட்டவர்களாக தான் பார்க்கின்றனர் என்பது தெளிவாகின்றது. அவரின் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன் என  தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் செலுத்த சமல் ராஜபக்சவிடம் பணம் கேட்ட நபர்

மின் கட்டணம் செலுத்த சமல் ராஜபக்சவிடம் பணம் கேட்ட நபர்


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

02 Aug, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், London, United Kingdom, குப்பிளான்

10 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Aberystwyth, United Kingdom, இலங்கை, நியூஸ்லாந்து, New Zealand, New Jersey, United States

08 Aug, 2020
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை

08 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

01 Aug, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Auckland, New Zealand

10 Aug, 2020
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல்

11 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US