காசாவில் போர் நிறுத்தம்....! அரபு நாடுகளின் கோரிக்கை: அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு
காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்டனுடனான சந்திப்பிலேயே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தெரிய வருகையில், காசா பகுதியில் நிலவும் மோதல் நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார்.
போர் நிறுத்த கோரிக்கை
இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் நேற்று (04) ஜோர்தானில் அரபு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அரபு நாடுகளின் பிரதிநிதிகள் போர் நிறுத்த கோரிக்கையை அன்டனி பிளிங்டனிடம் முன்வைத்துள்ளனர்.
எனினும், ஹமாஸ் மீண்டும் பலம் பெறக் கூடும் என்ற காரணத்தால் போர்நிறுத்தப் பிரகடனத்திற்கு தாம் உடன்படவில்லை என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
