இஸ்ரேலுக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்: போர் தொடர்பில் ஹிஸ்புல்லா தலைவர் வெளியிட்ட அறிவிப்பு (Video)
அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல் சரியானது தான் என் ஹிஸ்புல்லாஹ் தலைவர் நஸ்ரல்லாஹ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இவரது உரையைத் தொடர்ந்து லெபனான் எல்லையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
அத்துடன் ஹிஸ்புல்லா போரில் இணைந்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
தொடரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்......! காசா வீதியில் சிதறி கிடக்கும் சடலங்கள்: ஹமாஸ் அமைப்பினர் சூளுரை (Video)
ஹமாஸ் தாக்குதல்
ஹமாஸ் தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாஹ் நேற்று (03) முதன்முறையாக காணொளி வாயிலாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
? “LIVE: Sayyed Hassan Nasrallah, the Secretary General of Lebanon’s Hezbollah resistance movement, delivers speech https://t.co/jr84oCDLZz
— Press TV (@PressTV) November 3, 2023
அவர் தனது உரையில்,
அக்டோபர் 7 தாக்குதல் ஹமாஸால் நடத்தப்பட்டது. அந்த முடிவு 100% பாலஸ்தீனத்தினுடையது. அந்த தாக்குதல் முழுக்க முழுக்க இரகசியமாக செய்யப்பட்டது.
தாக்குதல் நடவடிக்கையின் அற்புதமான வெற்றிக்கு முழுமையான இரகசியம் தான் காரணம். ஒபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட் 100% பாலஸ்தீனம் எடுத்த முடிவு. அதை முழுமையாக செயல்படுத்தியதும் பாலஸ்தீனம்தான்.
அவர்கள் இந்த தாக்குதல் குறித்து யாரிடமும் சொல்லவில்லை. ஹமாஸ் எடுத்த முடிவு சரியானது, புத்திசாலித்தனமானது மற்றும் தைரியமானது, சரியான நேரத்தில் இதனை செய்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டு ஊடகங்கள் ஹிஸ்புல்லா தலைவரது உரையை பெய்ரூட்டில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்த்ததாகக் தெரிவித்துள்ளன.