தொடரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்......! காசா வீதியில் சிதறி கிடக்கும் சடலங்கள்: ஹமாஸ் அமைப்பினர் சூளுரை (Video)
காசாவின் வடக்கு பகுதியிலிருந்து உயிரை காப்பாற்றி கொள்ளும் நோக்குடன் தென்பகுதிக்கு தப்பிச் சென்ற மக்களின் கார் தொடரணி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ள நிலையில், பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச் செல்ல கடற்கரை பகுதி வீதியான ரஷீத்தை திறந்து வைத்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது.
இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பை நம்பி இன்று வெள்ளிக்கிழமை மக்கள் தமது கார்களில் அந்த வழியாக சென்றவேளை அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் கார்களில் சென்ற அனைவரும் கொல்லப்பட்டதுடன் அவர்களின் சடலங்கள் வீதிகளில் சிதறி காணப்படுகின்றன.
அம்புலன்ஸ் மீது தாக்குதல்
இதேவேளை மற்றுமொரு சம்பவத்தில், அம்புலன்ஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அம்புலன்ஸில் கடுமையான காயங்களுக்குள்ளான 15 முதல் 20 நோயாளிகள் காணப்பட்டனர்.
காசாவிற்கு வெளியே சிகிச்சைக்காக அல்ஸிபா மருத்துவமனையில் இருந்து எகிப்திற்கு ரபா எல்லை வழியாக அவர்களை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இதன்போதே இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேட்டையாடும் ஒரு களம்
காசாவில் இஸ்ரேல் தனது உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை தொடர்பாக பொய் சொல்வதாகவும், காசாவில் இஸ்ரேலை என்றென்றும் வேட்டையாடும் ஒரு 'களமாக' மாற்றப்போவதாகவும் ஹமாஸ் அமைப்பு சூளுரைத்துள்ளது.
ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படையணியின் இராணுவப் பேச்சாளர் அபு ஒபேடா வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 27 நாட்களுக்குப் பிறகு, எங்கள் போராளிகள் வடமேற்கு காசா, தெற்கிலும், பெய்ட் ஹனூனிலும் ஆக்கிரமிப்புப் படைகளைத் தொடர்ந்து எதிர்கொண்டு, ஆக்கிரமிப்பாளர்களின் வாகனங்கள் மற்றும் அவர்களின் படைகளுக்கு எதிராக வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
? Al-Qassam Brigades military spokesman Abu Obeida:
— عبد السلام (@onee_ummah) November 2, 2023
—
27 days after the start of Al-Aqsa Flood, our fighters continue to confront the occupation forces in northwest Gaza, the south, and in Beit Hanoun, executing successful attacks against the occupation's vehicles and soldiers. pic.twitter.com/XuoiJVqwFL
ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள்
எங்கள் போராளிகளின் செயல்பாடுகளை நாம் கணக்கிட முடியாது... கடந்த 48 மணி நேரத்தில், எங்கள் போராளிகள் டாங்கிகளின் பட்டாலியனை அழித்துள்ளனர் மற்றும் ஏராளமான ஆக்கிரமிப்புப் படைகளின் வீரர்களைக் கொன்று காயப்படுத்தியுள்ளனர், இதற்காக தாங்கி எதிர்ப்பு ஆயுதங்களைப் பயன்படுத்தி, நேரடி மோதல்கள், மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
காசா நகரின் வடமேற்கு பகுதியில் நாங்கள் ஒரு பெரிய எதிர்த்தாக்குதலை நடத்தினோம், ஆறு டாங்கிகள், இரண்டு துருப்புக் காவிகள் மற்றும் ஒரு புல்டோசர் ஆகியவற்றை அழித்தோம். “எதிரியின் கட்டளை அறிவிப்பதை விட எதிரியின் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். எதிரிகளின் பின்னால் சுற்றி வளைத்து, அவர்களைத் தாக்க முடிந்தது”.
ஆக்கிரமிப்பு இராணுவம் உலகிலேயே மிகவும் வலுவூட்டப்பட்ட வாகனமாக விளம்பரப்படுத்திய நேமர் ட்ரூப் கேரியர் (Namer troop carrier), நமது குண்டுகளுக்கு எதிரான அதன் முதல் சோதனையில் தோல்வியடைந்தது.
மக்களின் இழப்பு
ஆக்கிரமிப்புத் தலைமைக்கு நாம் தெரிவிப்பது என்னவெனில், கறுப்புப் பைகளில் உங்கள் வீரர்கள் திரும்பி வருவதைக் காண காத்திருங்கள். காஸாவை எப்பொழுதும் போல் உங்களுக்கான சாபமாக ஆக்குவோம்.
எதிரிப் படைகள் காசா பகுதியில் கோடாரிகளை அத்துமீறி உடைப்பதைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம், அவர்கள் ஒரு பெரிய சக்தியின் அச்சுகளை உடைப்பது போல் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
"எங்கள் ஆயிரக்கணக்கான மக்களின் இழப்பு மற்றும் தியாகத்திற்கான எங்கள் வலி, எதிரிகளை அதிக விலை கொடுக்க வைக்கும் எங்கள் உறுதியையும் வீரியத்தையும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.