மின் துண்டிப்பு குறித்து நீதியான விசாரணை: நாடாளுமன்றில் அரசு உறுதி

Parliament of Sri Lanka Sajith Premadasa Power cut Sri Lanka Sri Lankan Peoples Power Cut Today
By Rakesh Dec 11, 2023 08:03 AM GMT
Report

மின்வெட்டுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பில் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதைப் பொறுப்புடன் தெரிவிக்கின்றோம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மின் துண்டிப்பு தொடர்பாக மின்சார சபை மற்றும் எரிசக்தி மின்சக்தி அமைச்சு மட்டத்தில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் மின் துண்டிப்பு ஏற்பட்டமை தொடர்பில நாடாளுமன்றத்தில் நேற்று (10.12.2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய மற்றுமொரு டிஜே கேளிக்கை நிகழ்வு

யாழில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய மற்றுமொரு டிஜே கேளிக்கை நிகழ்வு

அமைச்சு மட்ட விசாரணை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "மின் துண்டிப்பு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சு மட்டத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மின் துண்டிப்பு குறித்து நீதியான விசாரணை: நாடாளுமன்றில் அரசு உறுதி | Island Wide Power Cut Srilanka

அதேபோன்று ஒரு மின் விநியோகக் கட்டமைப்பு மாத்திரம் செயலிழந்திருந்தால் எவ்வாறு முழு நாட்டுக்கும் மின்சாரம் இல்லாமல் போயிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொழில்நுட்ப ரீதியாக ஆராய வேண்டிய விடயம் என்பதை நான் அவருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதுவரை நாம் மின் உற்பத்தியை நுரைச்சோலை அனல் மின் நிலையம் மூலம் முன்னெடுக்கின்றோம். அதன் மூலம் 300 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஏனைய அனைத்து மின்சாரத்தையும் நாம் நீர் மின் உற்பத்தி மூலமே பெற்று வருகின்றோம்.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பெறுமதி சேர் வரி - நிதி இராஜாங்க அமைச்சர் : செய்திகளின் தொகுப்பு

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பெறுமதி சேர் வரி - நிதி இராஜாங்க அமைச்சர் : செய்திகளின் தொகுப்பு

மின்சாரத்திற்கான கேள்வி

அந்தவகையில் சீரற்ற காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி விநியோக கட்டமைப்பிலேயே இந்தச் செயலிழப்பு இடம்பெற்றுள்ளது. அந்தச் சந்தர்ப்பத்தில் 1500 மெகாவோட் மின்சாரத்திற்கான கேள்வி இருந்தது. எனினும், 300 மெகாவோட் மின்சாரமே இருந்தது.

மின் துண்டிப்பு குறித்து நீதியான விசாரணை: நாடாளுமன்றில் அரசு உறுதி | Island Wide Power Cut Srilanka

அச்சமயம் நுரைச்சோலை மின் விநியோகக் கட்டமைப்பும் செயலிழந்தது. அந்தவகையில் அனைத்து விநியோகக் கட்டமைப்புகளும் செயலிழந்தன. இவற்றை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு சுமார் 4 மணித்தியாலங்கள் தேவைப்பட்டன.

சிறு மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே நிலைமையைச் சரி செய்ய முடிந்தது. மின்சார சபையும் எரிசக்தி, மின்சக்தி அமைச்சும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. அதேவேளை நாம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

யாழில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது

யாழில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது

வருடக்கணக்கில் தாமதம்

2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவிருந்த பொல்பிட்டிய, கொத்மலை ஆகியவற்றின் நடவடிக்கைகள் வருடக்கணக்கில் தாமதமாகின.

மின் துண்டிப்பு குறித்து நீதியான விசாரணை: நாடாளுமன்றில் அரசு உறுதி | Island Wide Power Cut Srilanka

அதனால் ஏன் இந்தளவு காலதாமதம் ஏற்பட்டது என அது தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்குப் பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன. இரண்டு தினங்களுக்கு முன் 5 இலட்சம் பேருக்கு மின்சாரம் இல்லாமலுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

எனினும், இந்த வருடத்தில் அனைத்து நாட்களும் எந்தத் தடையுமின்றி நாம் மின்சாரம் வழங்கினோம். எதிர்பாராத விதமாகவே இந்தச் செயலிழப்பு ஏற்பட்டது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அந்தவகையில் மிகவும் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் அதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதை நாம் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம் என  என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US