யாழில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய மற்றுமொரு டிஜே கேளிக்கை நிகழ்வு

Sri Lankan Tamils Jaffna Northern Province of Sri Lanka
By Benat Dec 11, 2023 02:00 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட டிஜே களியாட்ட நிகழ்வு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்றையதினம்(10) இந்த களியாட்ட நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

எனினும், யாழ்ப்பாண மாநகர சபை இந்த களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி வழங்கவில்லை என்று அறிவித்துள்ளது. 

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் ஆபத்தான பழக்கம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் ஆபத்தான பழக்கம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

மறுக்கப்பட்ட அனுமதி

இது தொடர்பில் லங்காசிறி செய்திப்பிரிவு யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலனை தொடர்பு கொண்டபோது, “ இந்த களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி கோரப்பட்டதாகவும், எனினும் தாங்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்பதுடன் அனுமதியை மீறி இந்த களியாட்ட நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தார்.  

யாழில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய மற்றுமொரு டிஜே கேளிக்கை நிகழ்வு | Jaffna Dj Party

மேலும், அனுமதியை மீறி நடத்தப்பட்ட இந்த களியாட்ட நிகழ்வு தொடர்பில் குறித்த நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் இன்றையதினம்(11) விளக்கம் கோரியுள்ளதாகவும் யாழ். மாநகர ஆணையாளர் குறிப்பிட்டார். 

தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில், "விளையாடு மங்காத்தா" எனும் பெயரில் நடைபெற்ற இந்த இரவு இசை விருந்துக்கு, ஒருவருக்கு உணவுடனான நுழைவுச் சீட்டு 3 ஆயிரம் ரூபாய்க்கும், சாதாரண நுழைவுச் சீட்டு 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான, கேளிக்கை நிகழ்வுகளுக்கு நுழைவுச்சீட்டு விற்பனை செய்வதாயின் மாநகர சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என்பதுடன், நுழைவுச் சீட்டின் பெறுமதியில் குறிப்பிட்ட வீதம் மாநகர சபைக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.  எனினும்,  எவ்வித அனுமதிகளும் இன்றி இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதுடன் வரி ஏய்ப்பு செய்யும் வகையிலும் இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.  

நேற்றையதினம் இடம்பெற்ற இந்த கேளிக்கை நிகழ்வின்போது,  மதுபான பாவனை காணப்பட்டதுடன், கைக்கலப்பும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மின்சார கட்டணத்தை குறைக்க திட்டம்

மின்சார கட்டணத்தை குறைக்க திட்டம்

தவறான முன்னுதாரணம்

இதேவேளை, குறித்த நட்சத்திர ஹோட்டலில் கடந்த மாதம் 4ஆம் திகதி நடத்தப்பட்ட இதேபோன்றதொரு கேளிக்கை இசை நிகழ்ச்சி பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

யாழில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய மற்றுமொரு டிஜே கேளிக்கை நிகழ்வு | Jaffna Dj Party

அந்த நிகழ்வின் போது போதைப் பொருள் பாவனை அதிகரித்திருந்ததுடன், பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் தனியாளாகவும், ஜோடிகளாகவும் கலந்து கொண்டிருந்ததாகவும்,  அவர்களுக்கு தனியான அறைகள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. 

இவ்வாறான நிலையில், வடக்கில் தற்போது அதிகரித்து வரும் இவ்வாறான கேளிக்கை நிகழ்வுகள் எதிர்கால  இளைய சமூகத்தினருக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதுடன், தவறான பாதையில் இட்டுச் செல்ல வழிவகுப்பது போல உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும், யாழ். மாநகர சபை அனுமதி வழங்க மறுத்தபோதும் அதனையும் மீறி இவ்வாறான கேளிக்கை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளமை, மாநகர சபையினரின் ஆணையை மறுப்பதுடன், அவமதிக்கும் செயற்பாடாக பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்கால இளைய சமூகத்தினரை தவறான பாதையில் திசை திருப்பும் வகையில் இந்த கேளிக்கை நிகழ்வுகள் நடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

 

இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்பட்டமையினால் ஏற்பட்ட இழப்பு

இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்பட்டமையினால் ஏற்பட்ட இழப்பு

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி! உணவு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி! உணவு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இளைஞனின் விபரீத முடிவு தொடர்பில் பொலிஸார் சந்தேகம்

இளைஞனின் விபரீத முடிவு தொடர்பில் பொலிஸார் சந்தேகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US