சிங்கப்பூர் பயணம் ஷிரந்திக்கு பாவமா..! சாபமா - நாமலின் ரகசிய MAIL அம்பலம்
நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மருத்துவ ரீதியிலான பிரச்சினை தொடர்பான பரிசோதனைக்காகவும், அறுவைச் சிகிச்சைக்காகவும் தனியார் வைத்தியசாலையொன்றின் பணிப்புரைக்கமைய ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூர் சென்ற நிலையில், வயதான காலத்தில் இவ்வளவு உடல்நலக் கோளாறுகளுடன் போராடுவதற்கு அவர் கடந்த காலங்களில் செய்த பாவங்கள்தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன், பிரபாகரனின் தந்தை மற்றும் தாய் இருவரும் வயதான காலத்தில் இராணுவத்தினரால் சீரழிக்கப்பட்டனர்.
இவர்களின் பாவம்தான் மகிந்தவை எழுந்து நிற்க முடியாமலும், ஷிரந்தியை வயதான காலத்தில் சிங்கப்பூர் வரை கொண்டு சென்றுள்ளதோ என நினைக்க வைக்கின்றது.
வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்கள், குடும்பங்கள், குழந்தைகள் என முற்றிலும் இராணுவத்தினரால் சூறையாடப்பட்டபோது, நாட்டின் முதல் பெண்மணியாகப் போற்றப்படும் ஷிரந்தி மௌனம் காத்தார். ஆனால், தற்போது சிறைக்குச் சென்றுவிடுவோமோ என்ற பயத்தில் ஓடி ஒளிய வேண்டிய நிலை வந்துவிட்டது.
எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் கைதான நாமல் ராஜபக்சவின் மின்னஞ்சல் மூலம் மற்றுமொரு நபர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, மனிதாபிமானமற்ற வகையில் நடந்துகொண்ட ராஜபக்சர்களின் நிலை குறித்து உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகின்றது “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சி,