செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட இரும்பு உருண்டைகள்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து நேற்றையதினம் வியாழக்கிழமை(24) 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிறிய போத்தலும் சிறிய இரும்பு உருண்டைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.
செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றையதினம் 19 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 09 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் பங்களிப்பு
அதேவேளை, செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 28 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 76 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ ஏ ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணி தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை 88 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்றையதினமும் அகழ்வுப்பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam