ஈரான் போர் குறித்த ட்ரம்ப்பின் பேச்சுக்கு மெஸ்ஸி கைதட்டல்: வலுக்கும் கண்டனங்கள்
அமெரிக்காவின் மேஜர் லீக் சொக்கர் (MLS) சாம்பியன் பட்டம் வென்ற 'இன்டர் மியாமி' (Inter Miami) அணியினரை கௌரவிக்கும் நிகழ்வு வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்ட நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, ஈரானுக்கு எதிரான போர் குறித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பேச்சிற்கு கைதட்டியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள்
நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப்,
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள், ஈரானைத் திட்டமிட்டதை விட வேகமாக அழித்து வருகின்றன என்று போரின் தீவிரத்தைப் பற்றிப் பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது மேடையில் ட்ரம்ப் அருகில் நின்றுகொண்டிருந்த மெஸ்ஸி, அந்தப் பேச்சிற்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் கைதட்டியமை சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஈரானில் பாடசாலை சிறுமிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மெஸ்ஸி போன்ற ஒரு உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர் இத்தகைய அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது "புத்தியில்லாததன்மை" என்றும் "விசித்திரமானது" என்றும் பல்வேறு தரப்பினர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.