யாழ்.உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து
யாழ்.உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்ததானது சற்றமுன்னர்(7.3.2026) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், எரிபொருள் தாங்கியானது இன்றையதினம் உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் கிடங்கிற்கு எரிபொருளை நிரப்பி முயற்சித்த போது தீடீரென விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து
குறித்த தீ விபத்தில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரம் முழுமையாக சேதமடைந்ததாக தெரியவருகிறது.

இது குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவேளை, யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்திப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்தபோது மோட்டார் சைக்கிள் ஒன்று கடந்த 2ஆம் திகதி திடீரென தீப்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்-கஜிந்தன்
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri