ஈரான் அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் ஜனாதிபதியின் புதல்வர்
ஈரானில் விதிக்கப்பட்டுள்ள இணையத் தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அவர்களின் மகன் யூசுப் பெசெஷ்கியான் வலியுறுத்தியுள்ளார்.
போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளை காட்டும் புகைப்படங்கள், காணொளிகள் பரவுவதை தள்ளிப்போடுவதால் எந்த பிரச்சினையும் தீராது என அவர் தெரிவித்துள்ளார்.
2024 ஆண்டில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெசெஷ்கியானின் மகனும் அரசு ஆலோசகருமான யூசுப், டெலிகிராம் பதிவொன்றில், இணையத் தடை தொடர்வதால் மக்கள் மற்றும் அரசாங்கத்துக்கிடையிலான இடைவெளி மேலும் பெருகும் என எச்சரித்துள்ளார்.

இணைய தடையினால் அரசாங்கத்தின் மீது அதிருப்தி வெளியிடாத தரப்பினரும் அதிருப்தி வெளிப்படுத்தும் தரப்பில் இணைந்து கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.
போராட்டங்களின் போது நடந்த வன்முறைகள் குறித்த காணொளிகள் வெளிவருவது தவிர்க்க முடியாத ஒன்று எனவும், இணையத்தை முடக்குவதால் பிரச்சினை தீராது; அதை தற்காலிகமாக ஒத்திவைப்பதே நடக்கும் எனவும் யூசுப் பெசெஷ்கியான் தெரிவித்தார்.
இணையத் தடையை நீக்குவதால் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் அபாயத்தை விட, தடையைத் தொடர்வதால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என யூசுப் பெசெஷ்கியான் கூறியுள்ளார்.
இதேவேளை, இணையத் தடையின் பின்னணியில் அரசு கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், நார்வேயைத் தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு இறந்தோரின் எண்ணிக்கை 25,000 வரை இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கானோர் இன்னும் கைது செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி