ஈரானின் புரட்சிகர காவல்படையின் தலைமைத் தளபதி கொல்லப்பட்டார்..
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமைத் தளபதி ஜெனரல் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீதான இஸ்ரேலின் இரவு நேர தாக்குதல்களின் போது அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து தாக்குதல்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலை இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியிருந்த நிலையில், இந்தத் தாக்குதல்கள் ஈரானின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இலக்குகளை உள்ளடக்கிய முன்கூட்டியே தாக்கும், துல்லியமான, ஒருங்கிணைந்த தாக்குதல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த தாக்குதலில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமைத் தளபதி ஜெனரல் ஹொசைன் சலாமியைத் தவிர மேலும், முக்கிய சில தலைவர்கள் கொல்லப்பட்டருக்கலாம் என்று ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
