போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை.. ஈரான் மறுப்பு
ஈரான் தொடர்ந்து இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் ஓமானிடம் ஈரான் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், போர்நிறுத்தம் எட்டப்படுவது சிக்கலான விடயம் என்றும் ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
அதேவேளை, இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்று தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், சில நேரங்களில் அவர்கள் அதை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் ஜி7 உச்சிமாநாட்டிற்குச் சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அமெரிக்கா இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இருப்பினும், ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் கோரினாரா இல்லையா என்பது குறித்து ட்ரம்ப் கூற மறுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
