ISIS பாணியில் ஈரானில் நடந்த கொடூரம் - உருவாக்கியது ட்ரம்பா..! கமெனியின் பரபரப்பு பதிவுகள்
ஈரானில் அண்மையில் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் கலவரங்களில் ஐஎஸ்ஐஎஸ் போன்று மக்களை உயிருடன் எரித்தும், தலை துண்டித்தும் கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு உயர்மட்ட அதிகாரி அயதுல்லா அலி கமெனி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் எக்ஸ் தளத்தில் இட்டுள்ள சில பதிவுகளில், "ஈரானில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரங்களைத் தூண்டியவர்கள், ஐஎஸ்ஐஎஸ் போன்று மக்களை உயிருடன் எரித்தும், தலை துண்டித்தும் கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த அமைப்பு மேற்கொண்டிருந்த அதே வகையான பயங்கரவாத முறைகளையே இவர்கள் கூட நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
ஈரானில் நடந்த அண்மைய கலவரங்களின் அடையாளமே வன்முறைதான். அது முழுக்க முழுக்க ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பாணியில் அமைந்துள்ளது.
ட்ரம்ப் வெளியிட்ட கருத்து
அப்படி என்றால் ஐஎஸ்ஐஎஸ்ஐ உருவாக்கியது யார்? தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி தாமே ஒருகாலத்தில், “ஐஎஸ்ஐஎஸ்-ஐ உருவாக்கியது நாங்கள்தான்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த அண்மைய கலவரங்களின் மூலம் நாட்டின் பாதுகாப்பை சீர்குலைப்பதே எதிரிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது.
பாதுகாப்பு இல்லையென்றால் எதுவுமே இல்லை. பாதுகாப்பு குலைந்தால் உற்பத்தி இல்லை, பாடசாலைகள் இல்லை, ஆய்வு இல்லை, அறிவு வளர்ச்சி இல்லை, முன்னேற்றமும் இருக்காது.
كان العنفُ السمةَ البارزة للفتنة الأخيرة في إيران، على غرار أسلوب داعش. ومن الذي صنع #داعش؟ الرئيس الأمريكي الحالي نفسه قال: نحن الذين صنعنا داعش.
— الإمام الخامنئي (@ar_khamenei) February 2, 2026
இந்த கலவரத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, அமெரிக்கா மற்றும் சயனிஸ்ட் சக்திகள் பயிற்சி அளித்த குழுக்களின் தலைவர்கள், உயிர் பலிகளை மேற்கொள்ளும் பணிக்கே நியமிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதற்காக, தங்கள் பிரசாரத்தின் மூலம் போர்க்களத்துக்கு இட்டுச் சென்ற ஏமாற்றப்பட்டவர்களையே கூட, பின்னால் இருந்து சுட்டு கொன்றனர்.” என தெரிவித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri