அமெரிக்க தடைக்கு பதிலடி! ஈரானின் அதிரடி அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும் வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல் போக்குவரத்து பாதையையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் மொஹ்சேன் ரெசாய் இது குறித்துத் தெரிவிக்கையில், புதிய தடை மண்டலத்திற்குள் நுழையும் கப்பல்கள் அனைத்தும் உடனடியாகத் தடைகளின் பட்டியலில் சேர்க்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மசகு எண்ணெய் விலை
அத்துடன் ஓமான் நாட்டின் எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பினூடாக அமைக்கப்படும் புதிய சர்வதேச கப்பல் பாதையை ஈரானே நிர்வகிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடற்பகுதியில் பரஸ்பர தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் மசகு எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களின் நடமாட்டம் பெருமளவில் குறைடைந்துள்ளது.

இதன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு 97 டொலரைக் கடந்து பதிவாகியுள்ளதுடன், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஈரானிய பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் வேட்டைத் திருவிழா! குதிரை வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்