நெருங்கிய கூட்டாளிகளின் பெயர்களில் கோடிக்கணக்கான சொத்துக்கள்! அதிகாரிகளிடம் சிக்கிய இருவர்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் சொத்துக்களை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கடத்தல்காரர்களில் ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய, காந்திசபுர பகுதியில் உள்ள ஏக்கர் நிலம் மற்றும் மூன்று மாடி வீடு ஆகியவற்றின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அதன் மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
மேலும், மற்றொரு கடத்தல்காரருக்கு எம்பிலிப்பிட்டிய, நியூ டவுன் பகுதியில் உள்ள 23.7 பேர்ச் நிலம் மற்றும் மூன்று மாடி வீடு ஆகியவற்றின் பயன்பாட்டை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கடத்தல்காரர்கள் தங்களின் நெருங்கிய கூட்டாளிகளின் பெயர்களில் இந்த சொத்துக்களை வாங்கியிருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.