கிடுக்கு பிடியில் சிக்கியுள்ள நாமலின் பின்னணி! திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட பிமல்
Namal Rajapaksa
Bimal Rathnayake
By Kamal
எயார்பஸ் கொள்வனவின் போது கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பிலான பல முக்கிய தகவல்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் சவப்பெட்டிக்கு ஆணி அடித்த சம்பவமாக இந்த ஊழல் மோசடியை சுட்டிக்காட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
லண்டன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்
லண்டன் நீதிமன்றத்தில் இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்....
இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் விமானங்களை விற்பனை செய்யும் போது இடம் பெற்ற முறைகேடுகள் தொடர்பில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டது.
எயார் பாஸ் நிறுவனமானது மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல்களின் போது கையூட்டல் கொடுக்கப்பட்டமை லண்டன் மேல் நீதிமன்ற விசாரணைகளில் நிரூபிகக்ப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டது.
ஏர்பஸ் கொள்வனவு செய்த போது 16 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு இந்த கொடுக்கல் வாங்கல்களை ரத்து செய்வதற்காக நட்டஈடாக 110 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நடவடிக்கைகளின் போதும் ஊழல் மோசடிகள் இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
ஏயார்பஸ் கொள்வனவின் போதும் மோசடி இடம் பெற்றுள்ளது அதேபோன்று இந்த கொள்வனவை ரத்து செய்யும்போதும் மோசடி இடம் பெற்றுள்ளது.
சர்வதேச நீதிமன்றங்களில் மோசடி குறித்து விசாரணை
இந்த கொடுக்கல் வாங்கல்களின் மூலமே நாட்டின் விமான சேவை நிறுவனம் வீழ்ச்சி அடைந்தது.
ஆசியாவின் மிகவும் பழமையான ஓர் விமான சேவை நிறுவனமாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கருதப்படுகின்றது.
எனவே இந்த மோசடிகளின் மூலம் இந்த விமான சேவை நிறுவனத்திற்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டது. இது தேசிய ரீதியான ஓர் குற்றச் செயலாக கருதப்பட வேண்டும்.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய ஒன்று, இரண்டு பேருக்கு மட்டுமல்லாமல் தொடர்புடைய சகலரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் இது சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அம்பலமான விடயமாகும். எனவே இதை நாம் பழிவாங்கல்கள் மேற்கொள்கிறோம் என குற்றம் சுமத்த முடியாது.
சர்வதேச நீதிமன்றங்களில் இந்த ஊழல் மோசடி குறித்து வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட, பிரான்ஸ் நிறுவனம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கையில் சாட்சியமளித்துள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US