ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கின் பணக்கார நாடாக மாற முடியும்: அமெரிக்க வெளியுறவுச் செயலர்
ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கிலேயே மிகவும் பணக்கார நாடாக உருவாக முடியும் என அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஆனால் அங்குள்ள ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தீவிரவாத மதகுருமார்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஈரான் தீவிரவாத மதகுருமார்களால் நடத்தப்படும் ஒரு நாடு. நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை; அவர்கள் தங்கள் சொந்த நாட்டையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்படும் பணம்
நாட்டின் பணத்தை மக்களுக்குப் பயன்படுத்தாமல் ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹூதிகள் மற்றும் ஷியா ஆயுதக் குழுக்களுக்கு வாரி வழங்குகிறார்கள்.
உலகம் முழுவதிலும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே இந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது" என்று குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், "ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே அமெரிக்காவின் முதன்மை இலக்காகும்.
அணு ஆயுதம் ஏந்திய ஈரான் இந்த உலகத்திற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.