வரலாறு காணாத தாக்குதல்கள்! மத்திய கிழக்கு முழுவதும் அதிரடி காட்டும் ஈரான் - முக்கிய விமான நிலையம் குறிவைப்பு
வடக்கு ஈராக்கின் குர்திஷ் பகுதியில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையம் மீண்டும் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இன்று தாக்கியதை தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க தளங்களையும் ஈரான் தாக்க தொடங்கியது.
உலக வரலாற்றிலேயே, ஈரான் இவ்வாறு அடுத்தடுத்து தாக்குதலை மேற்கொண்டமை இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் இந்த சரமாரி தாக்குதல்களில் அமெரிக்க இராணுவ தளங்கள் அனைத்தும் குறிவைக்கப்படுகின்றன.
கட்டார் - சவுதி அரேபியா
இந்நிலையில், சற்று முன்னர், இஸ்ரேல் மீதான ஈரானிய தாக்குதல்கள், அத்துடன் பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் நலன்கள் மீதான தாக்குதல்கள் தடையின்றி தொடரும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் வட்டாரம் கூறியுள்ளது.

இது மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஈரான் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில், சவூதி வெளியுறவு அமைச்சகம், ரியாத் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதியை ஈரான் குறிவைத்ததை உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம், இந்தத் தாக்குதல்களை எந்த சாக்குப்போக்கின் கீழும் அல்லது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது, மேலும் சவூதி, அதன் வான்வெளி மற்றும் பிரதேசத்தை ஈரானை குறிவைக்கப் பயன்படுத்த அனுமதிக்காது என கடுமையாக எச்சரித்துள்ளது.
அதேநேரம், ஈரானிய தாக்குதலால் வடக்கு கட்டாரில் உள்ள ரேடார் அமைப்பு குறிவைக்கப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam