ட்ரம்பிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு: பதற்றத்தை தணிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து இந்திய பிரதமரான நரேந்திர மோடிக்கு அழைப்பு வந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று( 24.03.2026) இந்திய பிரதமர் சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
ட்ரம்பிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு
அந்த பதிவில் தெரிவிக்கப்படுவதாவது,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததுடன், மேற்கு ஆசியாவின் சூழல் குறித்து பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதையும், கூடிய விரைவில் அமைதியை மீட்டெடுப்பதையும் இந்தியா ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணை திறந்த, பாதுகாப்பான மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்க உறுதி செய்வது முழு உலகத்துக்கும் அவசியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான முயற்சிகள் குறித்து தொடர்பில் இருக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம் என்றும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam