விடுதியொன்றில் கைப்பற்றப்பட்ட அரசியல்வாதியின் மருமகனுக்கு சொந்தமான கைத்துப்பாக்கி - வெளியான தகவல்
நுகேகொடை பகுதியில் உள்ள விடுதியொன்றிலிருந்த ஒருவரிடமிருந்து முன்னாள் அமைச்சரின் மருமகனுக்கு சொந்தமான கைத்துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி, முன்னாள் அமைச்சரின் மருமகனுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
29 வயதான குறித்த விடுதியின் மேலாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மருமகனுக்கு சொந்தமான விடுதி
குறித்த விடுதி முன்னாள் அமைச்சரின் மருமகனுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 85 கிராம் 'குஷ்' போதைப்பொருள் மற்றும் கைத்துப்பாக்கிக்கான 30 தோட்டாக்களை பொலிஸார் மேலும் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய போது சந்தேகநபரை ஜூலை 14 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பு
உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி அனுமதியின்றி கைமாற்றப்பட்டமை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி உரிமத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சந்தேகநபருக்கு போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam