சுகீஷ்வர பண்டாரவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுகீஷ்வர பண்டார எதிர்வரும் ஜூலை 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு அரச நிறுவனங்களிடம் இருந்து சம்பளம்பெற்ற விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கடந்த 18 ஆம் திகதி மத்தியக் குற்றப்புலனாய்வுப் பிரவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, விசாரணைகளை முன்னெடுக்கும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
இன்று காலை (01) சுகீஸ்வர பண்டார சிறை அதிகாரிகளால் சிறை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
இரண்டு அரச நிறுவனங்களிடம் சம்பளம் பெற்ற விவகாரம்
இரண்டு அரச நிறுவனங்களிடம் இருந்து சம்பளம்பெற்ற விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கடந்த 18 ஆம் திகதி மத்தியக் குற்றப்புலனாய்வுப் பிரவினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இன்று (01) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam