காய்ச்சல் நோயாளிகளுக்கு ஒரே தடவை சிகிச்சை! - உயிருக்கு ஆபத்து ஏற்படலாமென அபாய எச்சரிக்கை
டெங்கு அல்லது வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச்செல்லும் நோயாளிகளுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், பரசிட்டமாலின் சரியான அளவுக்கு பதிலாக ஸ்டீராய்டுகளை (Steroids)கொடுத்து ஒரே தடவை சிகிச்சையளித்தால், சுகாதார அமைச்சகத்திடம் முறைப்பாடு அளிக்குமாறு ஆணையகத்தின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (30) இலங்கை மருத்துவ சங்க அரங்கில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து
இது தொடர்பான முறைப்பாடுகளை டெங்கு தொடர்பான முறைப்பாடுகளுக்கான ஹொட்லைன் எண் 0117966366 மற்றும் 1999 அல்லது 1907 ஆகிய இலக்கங்களில் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே காய்ச்சல் தொடங்கிய 48 மணி நேரத்திற்குள் முழுமையான இரத்தப்பரிசோதனை (Complete Blood Count) செய்வது மிகவும் முக்கியம் என்றும், இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிப்பதில் எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்ட பின்னர் 'ஒரே ஒரு முறை' மருந்துகளை வழங்குவதன் மூலம் காய்ச்சல் குறைந்தாலும், ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தால், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற 'ஒரே ஒரு முறை' சிகிச்சைகளை அளிப்பவர்கள் மீது சுகாதார அமைச்சகத்திடம் முறைப்பாடுகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam