எரிபொருள் கையிருப்பு! திடீரென இரத்து செய்யப்பட்ட கப்பல்கள் தொடர்பில் அமைச்சர் தகவல்
எதிர்வரும் மே மாதம் வரை தடையின்றி எரிபொருளை விநியோகிக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.
எரிபொருள் கையிருப்பு
இதன்போது, எரிபொருள் கையிருப்பு தொடர்பிலான விபரங்களை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார்.

தற்போது சுமார் 134,000 மெற்றிக் டொன் டீசல் கையிருப்பில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் முற்பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் மூலம் மேலும் 124,000 மெற்றிக் தொன் கிடைக்கவுள்ளது. இதன்படி, மே மாதம் இரண்டாம் வாரம் வரை போதுமான டீசல் கையிருப்பு உள்ளது
தற்போது கையிருப்பிலும் பிரவேசிக்கவுள்ள கப்பல்களிலும் சேர்த்து 151,450 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் உள்ளது.
எண்ணெய் கப்பல் இரத்து
ஏப்ரல் மாதத்தில் மேலதிகமாக 55,300 மெற்றிக் டொன் ஒக்டேன் 92 ரக பெட்ரோலை தாங்கிய கப்பல் நாட்டிற்கு வரவுள்ளது.
இதற்கமைய, சுப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஆகியவையும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது. மார்ச் 17ஆம் திகதி திறக்கப்பட்ட விலைமனு மூலம் ஏப்ரல் மாதத்திற்கான டீசல், பெற்றோல் மற்றும் ஜூன் மாதத்திற்கான மசகு எண்ணெய் தொகுதிகள் பெறப்பட்டுள்ளன.
தனியார் நிறுவனங்களின் சில கப்பல்கள் மற்றும் அரசாங்கத்தின் ஒரு மசகு எண்ணெய் கப்பல் இரத்து செய்யப்பட்டதால், ஏப்ரல் மாதக் கொள்வனவை உறுதிப்படுத்த புதிய விலைமனு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam