ரணிலுக்கு ஆதரவாக போராட்டம்! அரசியல்வாதிகள் சிலருக்கு எதிராக சிஐடியினர் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு அருகில் ஆட்களை அழைத்து வந்த அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது கோட்டை நீதவான் நீதிமன்றம் அருகே பெருந்திரளான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஒன்று திரண்டிருந்தனர்.
விசாரணைகள் ஆரம்பம்
அவ்வாறான ஆதரவாளர்களை பெருமளவில் அழைத்து வந்த அரசியல்வாதிகள் சுமார் 20 பேரளவில் புலனாய்வுத்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அவர்களில் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னை நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தெரிய வந்துள்ளது.
தற்போது குறித்த அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
