போர்க்குற்ற வழக்கை அன்று தடுத்து நிறுத்தி அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விஜயதாச ராஜபக்ச
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பான்கீ மூன் 2011ஆம் ஆண்டு தருஸ்மன் அறிக்கையை கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க எடுத்த முயற்சியை தானே முறியடித்ததாக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தில், தருஸ்மன் அறிக்கையில் இறுதி போரில் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டமை கண்டறிப்பட்டுள்ளது.
அதில் குற்றவாளிகளாக ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர், முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளின் பெயர் பட்டியலை கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக அன்றைய ஜனாதிபதி மகிந்தவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.
இறுதி யுத்தம் நிறைவடைந்த 48 மணித்தியாலயத்தில்
அச்சந்தர்ப்பத்தில் அதிர்ச்சிக்குள்ளான ஜனாதிபதி மகிந்த செய்வதறியாது என்னிடம் கதைத்தார்.
அப்போது நான் எதிர்க்கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். அதன்போது நாங்கள் ஒரு நாள் முழுவதும் கதைத்து ஐந்து காரணங்களை சுட்டிக் காட்டி எமது நாட்டுக்கு எதிராக எவ்வாறு வழக்கு தொடுக்க முடியும் என எனது பெயரில் கடிதம் ஒன்றை அனுப்பினேன்.

அப்போது ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் இரண்டு காரணங்களை ஏற்றுக் கொண்ட பான் கீ மூன் வழக்கு தாக்கல் செய்வதை கைவிடுவதாக தெரிவித்திருந்தார்.
இறுதி யுத்தம் நிறைவடைந்த 48 மணித்தியாலயத்தில் இலங்கை வந்த பான் கீ மூன் இறுதி போரில் நடைபெற்ற யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் உள்ளக விசாரணை செய்ய வேண்டும் என புரிந்தணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டார்.அதை கொண்டே அவர் சர்வதேச விசாரணை அறிக்கையையும் தயாரித்தார்.
இலங்கை ஒப்புதல் வழங்கியதாலே அவருக்கு அவ்வாறு செய்ய முடிந்தது.
செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரிலும் இலங்கைக்கு மேலும் அழுத்தங்கள் பிரயோகிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam