இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டு பயணிகளுக்கு இலவச விசா நீட்டிப்பு
ஈரான் போர் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேற முடியாத வெளிநாட்டுப் பிரஜைகளின் வீசா காலத்தை இலவசமாக நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து வெளியேற முடியாத பயணிகள் விசா காலாவதி சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாக குடிவரவு மற்றும் குடியேற்ற துறை தெரிவித்துள்ளது.
2026 பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கு நோக்கி செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, குடிவரவு மற்றும் குடியேற்ற திணைக்களம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக சிறப்பு நடவடிக்கையாக இலவசமாக 7 நாட்கள் விசா நீட்டிப்பு வழங்க தீர்மானித்துள்ளது.
தற்போதைய விசா காலம் முடிவடையும் திகதியிலிருந்து மேலும் 7 நாட்கள் வரை இந்த விசா நீட்டிப்பு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை பயணிகள் சட்டபூர்வமாக நாட்டில் தங்கியிருந்து தங்களின் பயண ஏற்பாடுகளை நிறைவு செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri