அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த அதிரடி நடவடிக்கை : ட்ரம்ப் அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீது அமெரிக்கா மிகப்பெரிய அளவிலான நேரடி இராணுவத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் முக்கிய இராணுவ நிலைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஈரானின் அச்சுறுத்தல்களை முறியடிக்கவும், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் கடும் கண்டனம்
இந்தத் தாக்குதலால் இப்பகுதியில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri