கலால் துறை உயர் அதிகாரிகள் உறவினர்களுக்கு எதிராக விசாரணை
கலால் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்களின் சொத்துகள் குறித்து உடனடியாக விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று இலஞ்சமாக பெறப்பட்ட பணம் தொடர்பாக இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான பல தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவானது மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலால் துறை உயர் அதிகாரிகள்
அனைத்து தகவல்களின்படி, கலால் துறை உயர் அதிகாரிகள் நெருங்கிய உறவினர்களிடம் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தகவல்களும் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |