இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினை: விசேட கவனமெடுக்கும் இந்திய தரப்பு
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சரை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
குறித்த சந்திப்பானது எதிர்வரும், புதன்கிழமை(04.12.2024) கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேடமாக, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களில் ஈடுபடுவதன் காரணமாக தொடர்ச்சியான கைதுகள் நடைபெற்று வருகின்றன.
கடற்றொழில் அமைச்சர்
குறிப்பாக, கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரும், அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் சம்பந்தமாக நெகிழ்ச்சித்தன்மையைக் காண்பிக்க முடியாது என்று அறிவித்துள்ளார்.
அத்துடன், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசும் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யுமாறும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் கைப்பற்றுமாறும் கடற்படைக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே இந்தியத் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரைச் சந்திக்கவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
